என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்துறை தபால் நிலையம்"

    செந்துறை அண்ணா நகரில் தனியார் கட்டிடத்தில் தலைமை தபால் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    செந்துறை அண்ணா நகரில் தனியார் கட்டிடத்தில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்த தபால் நிலையத்தில் இன்று காலை 9 மணி அளவில் மின்தடை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தபால் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டரை ஊழியர்கள் இயக்கினர்.

    அப்போது திடீரென ஜெனரேட்டர் தீ பிடித்து எரிந்தது. இது குறித்து ஊழியர்கள் செந்துறை தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அதிகாரி செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. ஜெனரேட்டர் ஏன் தீ பிடித்தது என விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ×