என் மலர்
நீங்கள் தேடியது "நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார்"
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வைத்து 2 ஆயிரம் பேருக்கு மோகன்.சி.லாசரஸ் விருந்து வழங்கினார். #mohanclazarus
நாசரேத்:
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழை-எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதே போன்று இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன். சி. லாசரஸ் தலைமை வகித்தார். நாலுமாவடி சேகர குரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்தார்.
நாலுமாவடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள ஏழை -எளிய மக்கள் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வகுமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர். #mohanclazarus
கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கடும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் ரூ. 20 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. #keralarain
நாசரேத்:
கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கடும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெரியார் தாலுகா செண்ட மங்கலம் கிராமத்தில் 700 குடும்பத்திலுள்ள 2 ஆயிரத்து 500 பேருக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான 5 கிலோ அரிசி பைகள், மசாலாப் பொருள்கள், சீனி, பிஸ்கட், மாணவ -மாணவிகளுக்கான பேக்குகள், டிசர்ட், நைட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் அதன் ஊழியர்கள், அதனுடன் இணைந்து செயல்படும் புது வாழ்வுச் சங்க உறுப்பினர்கள் மூலமாக 3-ம் கட்டமாக வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வகுமார் தலைமையில் புது வாழ்வுசங்கத்தினர் செய்திருந்தனர். #keralarain






