என் மலர்
நீங்கள் தேடியது "மினி பேருந்து தீவிபத்து"
- தீவிபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
- தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து பள்ளிகொண்டா அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் 26 பயணிகள், ஓட்டுநர் உடனடியாக இறங்கியதால் நல்வாய்ப்பாக எவ்வித காயமின்றி உயிர் தப்பினர்.
தீவிபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீவிபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தின் அருகே மினி பேருந்து தீப்பிடித்து வெடித்ததில் 3 பேர் பலியாகினர். #RussiaMinibusFire
ஏகடெரின்பர்க்:
ரஷிய நாட்டில் மேக்னிடோகார்ஸ்க் என்ற நகரில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரவடா ஆகிய இரு தெருக்கள் சந்திக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பேருந்தில் இருந்த 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
மினி பேருந்தினுள் 2 எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எரிவாயு உபகரணங்கள் செயலிழந்ததால் பேருந்து தீப்பிடித்தபோது, எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததாக உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த பகுதி அருகே நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் பலியாகினர். 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலரைக் காணவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. #RussiaMinibusFire