என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து விபத்து
- தீவிபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
- தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து பள்ளிகொண்டா அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் 26 பயணிகள், ஓட்டுநர் உடனடியாக இறங்கியதால் நல்வாய்ப்பாக எவ்வித காயமின்றி உயிர் தப்பினர்.
தீவிபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீவிபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






