search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமைத்தல்"

    கோவா கடற்கரையில் சமையல் செய்தாலோ அல்லது மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டாலோ உடனடியாக ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #GoaBeach
    பனாஜி:

    இந்தியாவில் உள்ள கடலோர சுற்றுலா இடங்களில் முதன்மை இடத்தில் இருப்பது கோவா மாநில கடலோரமாகும்.

    கோவா கடற்கரையில் ரம்மியமான சூழ்நிலை இருப்பதால் அங்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது உண்டு.

    ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கோவா கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள். இந்தியர்களை தவிர வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிலும் கணிசமானவர்கள் கோவா கடற்கரைக்கு செல்ல தவறுவது இல்லை.

    கோவா கடலோரத்தில் மது அருந்துவது மிக பிரதானமான பொழுது போக்காக உள்ளது. சுங்கவரி குறைப்பு காரணமாக கோவா கடற்கரையில் மிக குறைந்த விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதும் இதற்கு உதவுவதாக உள்ளது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவா கடலோரத்தில் சட்டம்- ஒழுங்கு அதிக அளவில் சீர் குலைந்து வருகிறது. கோவா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கேயே அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு மது அருந்தி தகராறில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன.


    இதையடுத்து கோவா கடலோர சுற்றுலா பயணிகளை நெறிப்படுத்த சட்டத் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் கோவா மாநில சட்டசபை கூட்டம் நடந்தது.

    அந்த கூட்டத்தில் சுற்றுலா சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி கோவா கடலோரத்தில் சமையல் செய்தாலோ அல்லது மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டாலோ உடனடியாக ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவா கடலோரத்தில் மது குடித்து விட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்து 3 மாதம் வரை சிறையில் அடைக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    கோவா கடலோரத்தில் மட்டுமின்றி பொது இடங்களில் மது குடித்து விட்டு ரகளை செய்பவர்களை தண்டிக்கவும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  #GoaBeach
    ×