என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை வக்கீல்"
சென்னை அருகே வக்கீல் வீட்டில் 60 பவுன் நகைகளை கொள்ளையடித்த வேலைக்காரி மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை தி.நகர் ராம் தெருவைச் சேர்ந்தவர் வைஜெயந்தி. வக்கீல். இவரது வீட்டில் கடந்த 7-ந்தேதி 60 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
இதுபற்றி பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் வைஜெயந்தி புகார் செய்தார். புகாரில் வேலைக்காரி ஜெயலட்சுமி மீது சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வேலைக்காரி ஜெயலட்சுமி, தனது மகன் விவேக்குடன் சேர்ந்து 60 பவுன் நகைகளை திருடியது தெரிய வந்தது.
இந்த நகையை ரூ.7 லட்சத்துக்கு விற்றுள்ளனர். அந்த பணத்தை கொண்டு விவேக் புது மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளார்.
இதையடுத்து விவேக்கை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலைக்காரி ஜெயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews






