என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்டோரியா மகால்"

    • கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி அனுமதிக்கப்படுகின்றனர்.
    • கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 25 ஆயிரம் பேர் விக்டோரியா பொது அரங்கை பார்வையிட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விக்டோரியா மகால் அமைக்கப்பட்டது. கடந்த 1883-ம் ஆண்டு சீன செராமிக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம் தற்போது ரூ.32.62 கோடியில் அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    விக்டோரியா மகாலை பொதுமக்கள் பார்ப்பதற்கு தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்து பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு ஸ்லாட் இருக்கும் வகையில் 60 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் வருவோரும் மகாலை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கியூ.ஆர்.கோடு மூலம் பெயர் பதிவு செய்யும் வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி அனுமதிக்கப்படுகின்றனர்.

    கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 25 ஆயிரம் பேர் விக்டோரியா பொது அரங்கை பார்வையிட்டுள்ளனர்.

    தற்போது பொதுமக்கள் காத்திருந்து பார்க்கக்கூடிய சூழல் நிலவி வருவதால் காத்திருப்பு அறை புதிதாக கட்டப்பட்டுள்ளது. மழை, வெயில் பாதிப்பு இல்லாமல் பார்வையாளர்கள் அரங்கிற்கு செல்வதற்கு முன்னதாக குளு குளு வசதியுடன் கூடிய காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த நவீன காத்திருப்போர் அறை 4 அமைக்கப்பட்டு இருப்பதால் அங்கு வரக்கூடிய பார்வையாளர்கள் அதில் சிறிது நேரம் தங்க வைக்கப்படுகின்றனர். ஒரு அறையில் 20 பேர் வரை அமரலாம். இந்த வசதியை பொதுமக்கள் வரவேற்று இருப்பதோடு வெயில் மற்றும் மழையில் இருந்து விலகி பாதுகாப்பாக காத்திருந்து செல்வதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக பாராட்டுகின்றனர்.

    கொல்கத்தாவில் புகழ்பெற்ற விக்டோரியா மகால் மீது பறந்த ஆளில்லா விமானம் தொடர்பாக சீன வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் புகழ்பெற்ற விக்டோரியா மகால் மீது சிறிய ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது.

    இதை அறிந்த போலீசார் உடனே அப்பகுதிக்கு சென்றனர். ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட சீன நாட்டை சேர்ந்த லீ வெய்யை கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, சீன வாலிபர் லீ ஜிவெய் மலேசியாவில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்துள்ளார். அவர் சிறு ஆளில்லா விமானம் பறக்கவிட்டதற்கான உண்மையான நோக்கம் குறித்து விசாரித்து வருகிறோம்.

    விக்டோரியா மகாலில் இருந்து சிறிய தூரத்தில் துறைமுகம், போன்ற முக்கிய பகுதிகள் உள்ளன. இங்கு ஆளில்லா விமானம் பறக்கவிட அனுமதி பெற வேண்டும். ஆனால் அவர் அனுமதி எதுவும் பெறவில்லை என்றனர்.
    ×