search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slope"

    • கொச வப்பட்டியில் சுமார் 3 ஏக்கரில் குட்டை மற்றும் சுடுகாடு உள்ளது.
    • இந்த நிலையில் வருவாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பனை மரத்தை வெட்டியுள்ளனர்.

    காகாபாளையம்:

    சேலம் அருகே உள்ள இடங்கணசாலை நக ராட்சிக்கு உட்பட்ட கொச வப்பட்டியில் சுமார் 3 ஏக்கரில் குட்டை மற்றும் சுடுகாடு உள்ளது.

    இந்த குட்டையில் மழை காலங்க ளில் தண்ணீர் தேங்கும். இந்த குட்டையின் கரை யோரத்தில் பனை மரங்கள் உள்ளது. இந்த குட்டையை யும், அருகாமையில் உள்ள சுடுகாட்டையும் பிரிக்கும் வகையில் நடு பகுதியில் ரோடு செல்கிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு குட்டையில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டி ருந்தன. தற்போது அவற்றை அகற்றி விட்டு, அங்கு தற்போது பொது மக்கள் நடந்து செல்ல நடைமேடை, நீர்த்தேக்க குட்டை மற்றும் சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக குட்டையில் இருந்து லாரிகளில் 250 லோடு மண் வெட்டி எடுக்கப்பட்டது. மேலும் இங்கு கடந்த வாரம் சுமார் 30 ஆண்டுகள் பழ மையான இச்சி மர கிளை களை வெட்டி அகற்றி னார்கள். அதனை தொடர்ந்து, அரசு அனுமதி யின்றி கரையோரமாக நின்ற 15 ஆண்டுகள் பழமையான பனைமரத்தை வேரோடு வெட்டி சாய்த்துள்ளனர்.

    மேலும் குட்டையின் கரையோரம் கட்டப்பட்டி ருந்த தானியகளத்தை இடித்து அகற்றினர். இத னால் சுற்று வட்டார மக்கள் தங்கள் தோட்டங்க ளில் விளையும் ராகி, சோளம், கம்பு, கடலை ஆகிய தானி யங்களை காய வைக்க இடம் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள சுடுகாட்டை அகற்றும் முயற்சியில் நக ராட்சியினர் ஈடுபட்டு வரு வதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு செலவில் மரக்கன்றுகள் நடவு செய்துவிட்டு, அதன் பிறகு அந்த மரக்கன்று களை, பிடிங்கி அகற்றுவது தொடர் கதையாக உள்ளது. பனை மரங்களை பாது காக்கும் வகையில் அவற்றை வெட்ட கூடாது என தமிழக அரசு ஏற்க னவே உத்தரவிட்டு இருக்கி றது. மேலும் பல்வேறு இடங்களில் பனை மர விதைகளை அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நட்டு ஊக்கவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் வரு வாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் பனை மரத்தை வெட்டியுள்ளனர். இது பற்றி அதே பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவர் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை என குமுறலுடன் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது.
    • அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 512 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 408 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 103.59 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 102. 95 அடியானது. வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    ×