search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivanmalai Temple"

    • திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் கந்த சஷ்டி விழா கடந்த 14- ந்தேதி தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் கடந்த 18-ந்தேதி இரவு நடைபெற்றது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் கந்த சஷ்டி விழா கடந்த 14- ந்தேதி தொடங்கியது. அன்று சாமி திருமலையில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார்.

    அதுசமயம் தினசரி காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் ஆகியன நடைபெற்று வந்தது. இதையொட்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் கடந்த 18-ந்தேதி இரவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியசாமி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    விழா நிறைவு நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு நடந்தது. பின்னர் சாமி சப்பரத்தில் திருமலையில் எழுந்தருளினார். சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றதையடுத்து படிக்கட்டு வழியாக சுவாமி திருமலையை அடைந்தார்.

    விழாவில் திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் முருக பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • எழுத்தர், சீட்டு விற்பனையாளர், தட்டச்சர், காவலர், தோட்டக்காரர், உதவி மின் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
    • இந்து மதத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வழக்கு எழுத்தர்-1, சீட்டு விற்பனை யாளர் -2, தட்டச்சர் -1, காவலர் -4, தோட்டக்காரர் -1, திருவலகு -2, கூர்க்கா-1, உதவி மின் பணியாளர் -1 என 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு பயிற்சி பெற்றவர், எழுத படிக்க தெரிந்தவர்கள், மின் கம்பி பணியாளர் பயிற்சி பெற்றவர்கள், மின்வாரிய த்தில் 'எச்' சான்று பெற்றவ ர்கள், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப படிவம், தகுதி உள்ளிட்ட விவரங்களை, https://sivanmalaimurugan.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து படிவம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் அல்லது நேரில் வழங்கலாம். பணிகளின் பெயரை தபால் கவர் மீது எழுதி விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்து மதத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட, தகுதியான விண்ணப்பதாரர் மே 17 ந் தேதி மாலை 5:45 மணிக்குள் கோவிலுக்கு கிடைக்கும் வகையில் ஆவண நகல்கள் மற்றும் சுய விலாசமிட்ட தபால் உறையு டன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டுமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் விமலாதேவி முன்னிலையில் நடைபெற்றது.
    • கடந்த ஆண்டை விட ரூ.1,800 மட்டுமே அதிகரித்து ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    காங்கயம்:

    காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா பிப்ரவரி 5-ந்தேதி தொடங்கி 7ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் மற்றும் கேளிக்கை அரங்குகளுக்கு குத்தகை வசூல் செய்யும் உரிமத்துக்கான ஏலம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் விமலாதேவி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கடந்த முறை குத்தகை உரிமம் ரூ.7,98,700க்கு ஏலம் போனது. இந்த தொகையை குறைந்துபட்ச தொகையாக நிா்ணயித்து இந்த ஆண்டு ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் சிவன்மலை பகுதியை சோ்ந்த நபா் ரூ.8 லட்சத்து 500க்கு குத்தகை ஏலத்தை எடுத்தாா். இது கடந்த ஆண்டை விட ரூ.1,800 மட்டுமே அதிகரித்து ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    ×