சிவன்மலை கோவிலில் 13 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

எழுத்தர், சீட்டு விற்பனையாளர், தட்டச்சர், காவலர், தோட்டக்காரர், உதவி மின் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்து மதத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

காங்கயம் :

காங்கயம் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வழக்கு எழுத்தர்-1, சீட்டு விற்பனை யாளர் -2, தட்டச்சர் -1, காவலர் -4, தோட்டக்காரர் -1, திருவலகு -2, கூர்க்கா-1, உதவி மின் பணியாளர் -1 என 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு பயிற்சி பெற்றவர், எழுத படிக்க தெரிந்தவர்கள், மின் கம்பி பணியாளர் பயிற்சி பெற்றவர்கள், மின்வாரிய த்தில் 'எச்' சான்று பெற்றவ ர்கள், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவம், தகுதி உள்ளிட்ட விவரங்களை, https://sivanmalaimurugan.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து படிவம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் அல்லது நேரில் வழங்கலாம். பணிகளின் பெயரை தபால் கவர் மீது எழுதி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்து மதத்தை சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட, தகுதியான விண்ணப்பதாரர் மே 17 ந் தேதி மாலை 5:45 மணிக்குள் கோவிலுக்கு கிடைக்கும் வகையில் ஆவண நகல்கள் மற்றும் சுய விலாசமிட்ட தபால் உறையு டன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டுமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com