search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தைப்பூச தோ்த்திருவிழாவை முன்னிட்டு  சிவன்மலை கோவில் கடைகள் குத்தகை ரூ.8 லட்சத்துக்கு   ஏலம்
    X
    கோப்புபடம். 

    தைப்பூச தோ்த்திருவிழாவை முன்னிட்டு சிவன்மலை கோவில் கடைகள் குத்தகை ரூ.8 லட்சத்துக்கு ஏலம்

    • காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் விமலாதேவி முன்னிலையில் நடைபெற்றது.
    • கடந்த ஆண்டை விட ரூ.1,800 மட்டுமே அதிகரித்து ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    காங்கயம்:

    காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா பிப்ரவரி 5-ந்தேதி தொடங்கி 7ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் மற்றும் கேளிக்கை அரங்குகளுக்கு குத்தகை வசூல் செய்யும் உரிமத்துக்கான ஏலம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் விமலாதேவி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கடந்த முறை குத்தகை உரிமம் ரூ.7,98,700க்கு ஏலம் போனது. இந்த தொகையை குறைந்துபட்ச தொகையாக நிா்ணயித்து இந்த ஆண்டு ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் சிவன்மலை பகுதியை சோ்ந்த நபா் ரூ.8 லட்சத்து 500க்கு குத்தகை ஏலத்தை எடுத்தாா். இது கடந்த ஆண்டை விட ரூ.1,800 மட்டுமே அதிகரித்து ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×