என் மலர்

  நீங்கள் தேடியது "Shruti Hariharan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிகரன் மீது நடிகர் அர்ஜூன் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். #Arjun #ShrutiHariharan
  அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’.  இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார்.  இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார்.

  ஸ்ருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்.  இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அர்ஜூனின் மருமகன் துருவா சர்ஜா இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் அர்ஜூனைப் பற்றி பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், நடிகை சோனி செரிஸ்டா, அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். #Arjun #SonyCharishta
  அர்ஜூன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இருவர் ஒப்பந்தம்’. சமீர் தயாரித்து இயக்கி வரும் இப்படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கான்ட்ராக்ட் எனும் பெயரில் தயாராகி வருகிறது. இதில் சோனி செரிஸ்டா முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

  அர்ஜூன் பற்றி சோனி செரிஸ்டா கூறும்போது, ‘அர்ஜூன் தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர். நிஜமாகவே ஒரு ஜென்டில்மேன். ஒரு தூய்மையானவர். மக்கள் மத்தியில் நிரந்தரமாக இடம் பிடித்திருக்கிறார். நான் நடித்து வரும் இப்படத்தில் அவ்வளவு நாகரீகமாகவும் ஒரு வழி காட்டியாகவும் இருக்கிறார். 

  எந்த அமைப்பாக இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது என் கருத்து. அவர் மீது தவறான கருத்தை கூறுவது வருந்தத்தக்கது’ என்றார்.

  அர்ஜூனுடன் ‘நிபுணன்’ படத்தில் ஜோடியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன், அவரைப் பற்றி பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், சோனி செரிஸ்டா, அர்ஜூனுக்கு ஆதரவாக புகழ்ந்து பேசியிருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விக்ரம் வேதா, ரிச்சி, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், மீடூ விவகாரத்தில் ஹீரோக்கள் எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். #MeToo #ShraddhaSrinath
  நிபுணன் திரைப்பட படப்பிடிப்பில் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை சுருதி ஹரிகரன் மீடூ இயக்கத்தில் தன் அனுபவத்தை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து கன்னடத்தில் யூடர்ன், தமிழில் விக்ரம் வேதா, ரிச்சி, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் சுருதிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். “உனக்கு நேர்ந்ததை நினைத்து நான் வருந்துகிறேன். பணியிடத்தில் யாருமே அசவுகரியமாக உணரக்கூடாது.

  அதேபோல் அடுத்தவர்களை இம்சிக்கும் இடத்திலும் யாருமே இருக்ககூடாது. ஒரு பெண் ஒரு நட்சத்திர நடிகருடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை வெளியே பகிர்ந்து கொள்கிறார். இணைய உலகமே அவரை வாட்டி எடுக்கிறது.

  போதாதற்கு கொலை மிரட்டல்களும், விளம்பரத்துக்கான புகார் என்ற வசவுகளும் சேர்ந்து கொள்கின்றன. திரையில் எனது தங்கையை காப்பேன், எனது தாயை பேணுவேன் என்றெல்லாம் சூளுரைத்து வில்லன்களை அடித்து துவைத்து, லாரியைக்கூட பறக்கவிட்டவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்.  நமது சூப்பர் ஹீரோக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இப்போது நான் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
  ×