என் மலர்

  நீங்கள் தேடியது "Sony Charishta"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் அர்ஜூனைப் பற்றி பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், நடிகை சோனி செரிஸ்டா, அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். #Arjun #SonyCharishta
  அர்ஜூன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இருவர் ஒப்பந்தம்’. சமீர் தயாரித்து இயக்கி வரும் இப்படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கான்ட்ராக்ட் எனும் பெயரில் தயாராகி வருகிறது. இதில் சோனி செரிஸ்டா முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

  அர்ஜூன் பற்றி சோனி செரிஸ்டா கூறும்போது, ‘அர்ஜூன் தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர். நிஜமாகவே ஒரு ஜென்டில்மேன். ஒரு தூய்மையானவர். மக்கள் மத்தியில் நிரந்தரமாக இடம் பிடித்திருக்கிறார். நான் நடித்து வரும் இப்படத்தில் அவ்வளவு நாகரீகமாகவும் ஒரு வழி காட்டியாகவும் இருக்கிறார். 

  எந்த அமைப்பாக இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது என் கருத்து. அவர் மீது தவறான கருத்தை கூறுவது வருந்தத்தக்கது’ என்றார்.

  அர்ஜூனுடன் ‘நிபுணன்’ படத்தில் ஜோடியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன், அவரைப் பற்றி பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், சோனி செரிஸ்டா, அர்ஜூனுக்கு ஆதரவாக புகழ்ந்து பேசியிருக்கிறார்.
  ×