search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shark"

    • சுற்றுலா சென்றிருந்த இளைஞரை அவரது தந்தை கண் முன்னே சுறா மீன் விழுங்கியது.
    • விளாடிமிரைக் கொன்ற சுறா மீனை பிடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கெய்ரோ:

    ரஷ்யாவை சேர்ந்தவர் விளாடிமிர் போபோவ் (23). இவர் தனது தந்தையுடன் எகிப்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    ஹர்கடா என்னும் பகுதியில் உள்ள கடற்கரைக்கு விளாடிமிர் சென்றிருந்தார். கடலில் நீந்திக் கொண்டிருந்த அவரை, கரையிலிருந்து தந்தை கவனித்துக் கொண்டிருந்திருந்தார்.

    அப்போது திடீரென அங்கு வந்த ஒரு சுறா, விளாடிமிரை கடுமையாகத் தாக்கியது. இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். சில நிமிடங்களில் தந்தையின் கண் முன்னேயே விளாடிமிரை முழுங்கியது சுறா.

    இதுதொடர்பான் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விளாடிமிரைக் கொன்ற சுறா மீனை பிடித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மனித கை உள்பட உடல் துண்டுகள் இருப்பதாகவும் மீனவர்கள் கடலோர காவல்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.
    • அது காணாமல் போன பாரியாதான் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை செய்யப்படுகிறது.

    அர்ஜென்டினாவை சேர்ந்த 32 வயதான டியாகோ பாரியா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி அன்று காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பாரியாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாரியா, காணாமல் போன அன்று அர்ஜென்டினாவின் தெற்கு சுபுட் மாகாணத்தின் கடற்கரை அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பிறகு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், பாரியாவின் வாகனம் மட்டுமே கிடைத்தது.

    இந்நிலையில், பாரியா காணாமல் போன 10 நாட்களுக்கு பிறகு வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அருகில் மூன்று சுறாக்கள் கிடப்பதாகவும், அவை பிரித்தெடுக்கம்போது, மனித கை உள்பட உடல் துண்டுகள் இருப்பதாகவும் மீனவர்கள் கடலோர காவல்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல் பாக துண்டுகளை சேகரித்தனர். பின்னர், சந்தேகமடைந்த போலீசார் இதுகுறித்து பாரியாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், கேகரிக்கப்பட்ட உடல் பாகங்களில் இருந்த கையில் தனித்துவமான டேட்டூ இருப்பதை கண்டு, அது பாரியாதான் என்று அடையாளம் கண்டனர்.

    இருப்பினும், அது காணாமல் போன பாரியாதான் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை செய்யப்படுகிறது.

    மேலும், பாரிய எப்படி தண்ணீரில் மூழ்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×