என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seniormost head priest"

    கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் மிக மூத்த தந்திரி கன்டராரு மஹேஸ்வரரு தனது 91-வது வயதில் இன்று காலமானார்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் தற்போது ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்கு முன்பு குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்தி (தலைமை பூசாரி) தேர்வு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

    இந்த கோயிலில் மிக மூத்த தந்திரியாக பல ஆண்டுகள் இருந்தவர், கன்டராரு மஹேஸ்வரரு. தாழமோன் பரம்பரையை சேர்ந்த இவர் இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் உலக நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களில் ஐயப்பன் சிலைகளை நிர்மாணிக்கும் கடமைகளை செய்து வந்தார்.

    சமீபகாலமாக வயோதிகம் மற்றும் உடல்நிலை சார்ந்த காரணங்களால் ஐயப்பன் கோயிலுக்கு செய்யும் பூஜை, புணஸ்காரங்களில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில், செங்கநூர் பகுதியில் உள்ள தனது 91-வது வயதில் இல்லத்தில் கன்டராரு மஹேஸ்வரரு இன்று பிற்பகல் காலமானார்.

    அவரது இறுதிச் சடங்குகளுக்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
    #SabarimalaLordAyyappaTemple #seniormostheadpriest
    ×