என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SC collegium"

    • ஐந்து புதிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
    • 22 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    3 உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    உச்ச நீதிமன்ற தலைமையே நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், ஜே.கே. மகேஸ்வரி மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய கொலீஜியம் நேற்று கூடியது.

    இந்த கூட்டத்தின் முடிவில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. அஞ்சாரியா, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது.

    மேலும், ஐந்து புதிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்கவும் 22 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    நீதிபதி ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. #Collegium #JusticeJosephElevation
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.

    இது சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரகாண்டில் மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் அமல்படுத்தப்பட்ட  ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தவர் நீதிபதி ஜோசப் என்பதால், அவரது பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கொலிஜியம் குழுவில் உள்ள நீதிபதிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

    இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மீண்டும் கொலிஜியம் கூடியது. இக்கூட்டத்தில் நீதிபதி ஜோசப் விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை.

    இதையடுத்து கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதினார்.

    இந்நிலையில் கொலிஜியம் கூட்டம் இன்று மதியம் 1 மணியளவில் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில்  நீதிபதி ஜோசப் விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    கொலிஜியம் குழுவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நீதிபதி செலமேஸ்வர் வரும் ஜூன் 22-ஆம் தேதி ஓய்வு பெற இருப்பதால் அதற்கு முன்பு கொலிஜியம் கூட்டம் நடைபெற வேண்டும் என்று அவர் விரும்புவதாகத் தெரிகிறது. #Collegium #JusticeJosephElevation
    ×