search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saravanabava"

    கந்த சஷ்டியின் போது சிந்தனை முழுவதும் சஷ்டிக்கவசம் பாராயணம் செய்வதில் இருக்க வேண்டும். சரவணபவ மந்திரத்தை உச்சரித்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.
    பொதுவாகவே விரதங்களின்போது அந்தந்த தெய்வங்களின் நாமத்தை உச்சரிப்பது நல்லது. அதே போல் கந்த சஷ்டியின் போது சிந்தனை முழுவதும் சஷ்டிக்கவசம் பாராயணம் செய்வதில் இருக்க வேண்டும்.

    முடியாதவர்கள் எளிதாக சொல்லக்கூடிய மகாமந்திரமான ‘சரவண பவ’ என்பதைச் சொல்லலாம். எளிய மந்திரமானாலும் அதன் மகிமை அளவிட முடியாதது.

    ச- லட்சுமி கடாட்சம்,
    ர- சரஸ்வதி கடாட்சம்,
    வ- போகம்,
    ண-சத்துரு ஜெயம் (எதிரிகள் வெற்றி ),
    ப - ம்ருத்தய ஜெயம்,
    வ- நோயற்ற வாழ்வு.

    எனவே சரவணபவ மந்திரத்தை உச்சரித்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.

    முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.
    சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர்.

    பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோ முக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.

    உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்ததினம் வைகாசி மாத – விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறு உருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).

    மு  – முகுந்தன் என்கிற விஷ்ணு
    ரு – ருத்ரன் என்கிற சிவன்
    க – கமலத்தில் உதித்த பிரம்மன்.

    ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.
    திருப்பரங்குன்றம் கோவில் கருவறையை அடைய இங்கு ஆறுபடிகள் அமைந்துள்ளன. இந்தப் படிகளில் ஏறும்போது ‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே செல்வது நல்லது.
    முருகனின் அறுபடைத் தலங்களில் திருப்பரங்குன்றம் முதல் படை வீடாகத் திகழ்கிறது. சூரனை வென்ற முருகனுக்குப் பரிசாகத் தன் மகள் தெய்வானையை தேவேந்திரன் மணம் செய்வித்த திருத்தலம் இதுவாகும்.

    சைவம் (சிவவழிபாடு), வைணவம் (விஷ்ணு வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), சாக்தம் (அம்பாள் வழிபாடு), சௌரம் (சூரிய வழிபாடு), கவுரமாரம் (முருக வழிபாடு) என்னும் ஆறு வகையான மதங்கள் பழங்காலத்தில் இருந்தன. அவற்றை இணைக்கும் தலமாக திருப்பரங்குன்றம் கோவில் திகழ்கிறது. இதை கருவறையில் காணலாம்.

    ஐராவதம் என்னும் தேவலோகத்து யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானையை மணம் செய்த விழா பங்குனி உத்திரத்தையொட்டி, இங்கு பிரம்மோற்சவமாக நடக்கிறது. முருகப்பெருமானின் பாதத்தின் கீழ் இந்த யானை இடம் பெற்றுள்ளது. கருவறையை அடைய இங்கு சடாட்சரப்படிகள் என்னும் ஆறுபடிகள் அமைந்துள்ளன. இந்தப் படிகளில் ஏறும்போது ‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே செல்வது நல்லது.
    ×