search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of groundnuts"

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 25.50 குவிண்டால் எடை கொண்ட 77 மூட்டை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.90.39-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.80.30-க்கும் சராசரி விலையாக ரூ.86.70-க்கும் என ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 541-க்கு ஏலம் போனது.

    • விற்பனை தொகை ரூ.8 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.65க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம்போனது.

    அவினாசி :

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 210 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.8,000 முதல் ரூ.8,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ.7,800 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,300 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.8 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.75 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதியை சோ்ந்த 5 விவசாயிகள் 21 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 1,049 கிலோ. இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.65க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம்போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    ×