சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.8 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

விற்பனை தொகை ரூ.8 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா். கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.65க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம்போனது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  ரூ.8 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
Published on

அவினாசி :

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 210 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.8,000 முதல் ரூ.8,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ.7,800 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,300 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.8 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.75 ஆயிரத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதியை சோ்ந்த 5 விவசாயிகள் 21 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 1,049 கிலோ. இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.65க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம்போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

X

Maalai Malar
www.maalaimalar.com