search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sainik School"

    • குழு பாடல், குழு கருவி இசை, ஊமை நாடகம், குறு நாடகம் மற்றும் குழு நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்படன.
    • ஆசிரியர் பால்ராஜ், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    உடுமலை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 2022- 23ம் கல்வியாண்டின், தேசிய அளவிலான கலைப்போட்டிகள் நடத்தப்பட்டது.சைனிக் பள்ளி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியானது முதல்வர் கேப்டன் நிர்மல்ரகு முன்னிலையில் துவங்கியது.

    நடுவர்களாக கோவை இயற்கை அறிவியல் கட்டளை இயக்குனர் சீனிவாசன், உடுமலை கேந்திரிய வித்யாலா பள்ளி முதல்வர் சக்ரதாராபிரஸ்டி, சீனிவாசா பள்ளி முதல்வர் சத்தியபாமா செயல்பட்டனர்.இதில் ஆந்திர மாநிலம் கொருகொண்டா, மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர், உத்திரபிரதேசம் மெயின்புரி, பீகார் மாநிலம் நாலந்தா சைனிக் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அவ்வகையில் குழு பாடல், குழு கருவி இசை, ஊமை நாடகம், குறு நாடகம் மற்றும் குழு நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்படன. இதில், சந்திராபூர் சைனிக் பள்ளி, குழு பாடல் மற்றும் குழு இசைக்கருவிக்கான போட்டியில் வெற்றி பெற்றது.கொருகொண்டா சைனிக் பள்ளி, ஊமை நாடகத்திலும், மெயின்புரி சைனிக் பள்ளி குழு நடனத்திலும், நாளந்தா சைனிக் பள்ளி குறு நாடகத்திலும் வெற்றி பெற்றது. அதேநேரம் சந்திராபூர் சைனிக் பள்ளி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தட்டிச்சென்றது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் தீபு செய்திருந்தார். ஆசிரியர் பால்ராஜ், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீ விபத்து ஏற்பட்டால் எது போன்ற பொருட்களை பயன்படுத்தி அணைக்க வேண்டும்.
    • தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    உடுமலை : 

    உடுமலை அருகே உள்ள சைனிக் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தீயணைப்புத்துறை மூலம் தீயை அணைப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இதில் நிலைய அலுவலர் கோபால் தலைமை வகித்தார். இந்த சிறப்பு பயிற்சியில் தீ விபத்துக்களை தடுப்பது, தீ விபத்தின் வகைகள், தீயணைப்பு கருவிகளின் வகைகள் மற்றும் எந்த வகையான தீ விபத்து ஏற்பட்டால் எது போன்ற பொருட்களை பயன்படுத்தி அணைக்க வேண்டும்.

    தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, தீயணைப்பு வாகனத்தின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தீயணைப்புத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சைனிக் பள்ளியின் 60 ம் ஆண்டு வைர விழாவையொட்டி வரும் 16 ந்தேதி பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
    • முதல்வர் மு. க. ஸ்டாலின் 15 ந்தேதி உடுமலை வருகிறார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளி (ராணுவப்பள்ளி) உள்ளது. இந்த பள்ளியின் 60 ம் ஆண்டு வைர விழாவையொட்டி வரும் 16 ந்தேதி பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் 15 ந்தேதி உடுமலை வருகிறார். அன்று மாலை திருமூர்த்தி மலை செல்லும் முதல்வர் அங்குள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதியில் தங்குகிறார். மறுநாள் சைனிக் பள்ளி விழாவில் பங்கேற்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு செய்தார். விழா நடைபெறும் இடம் மற்றும் ஆடிட்டோரியத்தை பார்வையிட்டார். ஆய்வின் போது கலெக்டர் வினீத், எஸ்.பி சசாங்சாய், சப் கலெக்டர் ஜஸ்வந்த் கண்ணன், முன்னாள் எம். எல்.ஏ., ஜெய ராமகிருஷ்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மொடக்கப்பட்டி ரவி, ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமிமுருகன், துணை தலைவர் சண்முகவடிவேலு, தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார், செயல் அலுவலர் கல்பனா, குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்அணி கிரிகதிரேசன், பொறியாளர் அணி துணைத் தலைவர் மொடக்குப்பட்டி பாபு மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சி துறை, சைனிக் பள்ளி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×