search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைச்சர்  ஆய்வு
    X

    அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு  செய்த காட்சி.

    உடுமலையில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு

    • சைனிக் பள்ளியின் 60 ம் ஆண்டு வைர விழாவையொட்டி வரும் 16 ந்தேதி பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
    • முதல்வர் மு. க. ஸ்டாலின் 15 ந்தேதி உடுமலை வருகிறார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளி (ராணுவப்பள்ளி) உள்ளது. இந்த பள்ளியின் 60 ம் ஆண்டு வைர விழாவையொட்டி வரும் 16 ந்தேதி பள்ளி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் 15 ந்தேதி உடுமலை வருகிறார். அன்று மாலை திருமூர்த்தி மலை செல்லும் முதல்வர் அங்குள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் விடுதியில் தங்குகிறார். மறுநாள் சைனிக் பள்ளி விழாவில் பங்கேற்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு செய்தார். விழா நடைபெறும் இடம் மற்றும் ஆடிட்டோரியத்தை பார்வையிட்டார். ஆய்வின் போது கலெக்டர் வினீத், எஸ்.பி சசாங்சாய், சப் கலெக்டர் ஜஸ்வந்த் கண்ணன், முன்னாள் எம். எல்.ஏ., ஜெய ராமகிருஷ்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மொடக்கப்பட்டி ரவி, ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமிமுருகன், துணை தலைவர் சண்முகவடிவேலு, தளி பேரூராட்சி தலைவர் உதயகுமார், செயல் அலுவலர் கல்பனா, குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர்அணி கிரிகதிரேசன், பொறியாளர் அணி துணைத் தலைவர் மொடக்குப்பட்டி பாபு மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, ஊரக வளர்ச்சி துறை, சைனிக் பள்ளி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×