search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sabariala"

    சபரிமலை கோவிலுக்கு இன்று விழிப்புணர்வு பதாகையுடன் சென்ற சென்னை சிறுமி, இனி 50 வயதில்தான் வருவேன் என உறுதி அளித்துள்ளார். #Sabarimala #Sabarimalatemple

    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சன்னிதானத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. சுவாமி அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரியாக கருதப்படுவதாலும், 41 நாட்கள் கடும் விரதம் இருந்து காட்டுப்பாதை வழியாக மலையேறிச் சென்றே சுவாமி அய்யப்பனை தரிக்கமுடியும் என்பதாலும் காலம், காலமாக இந்த ஐதீகம் நடை முறையில் உள்ளது.

    தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங் கள் நடந்து வருகிறது.

    சபரிமலைக்கு செல்லும் இளம்பெண்களும் தடுத்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதனால் சபரிமலையில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

    அதேசமயம் பெற்றோருடன் 10 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளும் அதிகளவு சபரி மலைக்கு தற்போது வந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் சிலர் தங்கள் கைகளில் சபரிமலைக்கு எந்த வயது பெண்கள் செல்ல வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளையும் கைகளில் ஏந்திய வண்ணம் செல்கிறார்கள்.

    சென்னை புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற ஐ.டி. கம்பெனி ஊழியர் தனது 9 வயது மகள் பத்மபூரணியுடன் இன்று சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சாமி தரிசனத்திற்கு சென்றார். பத்மபூரணி தனது கைகளில் விழிப்புணர்வு பதாகை ஏந்திச் சென்றார். அதில் எனக்கு 9 வயது ஆகிறது. சபரிமலைக்கு 3-வது முறையாக வந்துள்ளேன். இனி 41 வருடங்கள் கழித்து எனது 50-வது வயதில்தான் சபரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வருவேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    நான் 20-க்கும் மேற்பட்ட முறை சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன். எனது மகள் பத்மபூரணியுடன் 3-வது முறையாக இன்று சபரிமலைக்கு வந்துள்ளேன். சபரிமலையில் காலம், காலமாக உள்ள ஐதீகத்தில் கோர்ட்டு தலையிடக்கூடாது. 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வரக் கூடாது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே எனது மகள் பதாகையுடன் இங்கு வந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala #Sabarimalatemple

    ×