search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RSS chief"

    • நாக்பூரில் 1925ல் விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது
    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் 6 லட்சத்திற்கும் மேல் தன்னார்வல தொண்டர்கள் சேவை செய்கின்றனர்

    இந்திய தேசியவாதத்திலும் கலாச்சாரத்திலும் நம்பிக்கையுடைய தன்னார்வலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொது சேவை சங்கம், ஆர்.எஸ்.எஸ். (RSS) எனப்படும் 'ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் ஸங்'. இந்த அமைப்பின் கிளைகள் உலகின் முக்கிய நகரங்களில் உள்ளது.

    சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களை தன்னார்வலர்களாக இதில் இணைத்து கொண்டுள்ளனர். இயற்கை பேரழிவு, இயற்கை சீற்றம், போர், பெருந்தொற்று உட்பட பல அவசரகாலங்கள் மற்றும் நெருக்கடி காலங்களில் இதன் தன்னார்வலர்கள் நாடு முழுவதும் சென்று தேச சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    நாக்பூரில் 1925-ஆம் வருடம் விஜயதசமி பண்டிகையன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. எனவே வருடாவருடம் அதன் கூட்டம் விஜயதசமியன்று நடைபெற்று வருகிறது.

    இவ்வருட விஜயதசமி சந்திப்பு கூட்டம், மகாராஷ்டிரா மாநில நாக்பூர் நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இதன் தலைவர் மோகன் பகவத் தொண்டர்களிடையே உரையாற்றினார்.

    அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

    மதவெறியால் ஏற்படும் துன்பங்களை உலகம் தற்போது கண்டு வருகிறது. காசாவில் நடைபெறும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷிய-உக்ரைன் போர்களை முடிவுக்கு கொண்டு வர தீர்வு காண்பது உலக நாடுகளுக்கு மிக கடினமாக உள்ளது. இதனால் உலக நாடுகள் சந்தித்து வரும் சமகால சவால்களுக்கும், சிக்கல்களுக்கும் நிரந்தர தீர்வை தேடி பாரதத்தை நோக்கி தங்கள் பார்வையை திருப்பியுள்ளன. பாரதத்தின் தொன்மையான சனாதன வழிமுறைகளின் மூலம் ஒரு புதிய பாதையை தேடுகின்றன. இதனை வழங்க பாரதம் முன் வர வேண்டும்.

    இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.

    • நாட்டின் அனைத்து சாதியினரும் இந்தியர்களே என்பதை நாம் உணர வேண்டும்.
    • அகண்ட பாரதம் உருவாக இளைஞர்கள் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பாரதம் 2047 எனது பார்வை, எனது செயல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளதாவது:

    பன்முகத்தன்மை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று பார்க்கிறது.பல வரலாற்று நிகழ்வுகள் நமக்குச் சொல்லப்படாமலும் சரியான முறையில் கற்பிக்கப்படாமலும் உள்ளன.

    முக்கியமாக நாம் முதலில் நமது சொந்த ஞானத்தையும் அறிவையும் மறந்து விட்டோம். வடமேற்கு பகுதியில் இருந்து வந்த வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் நிலம் கைப்பற்றப்பட்டது.

    தேவையில்லாமல் சாதி மற்றும் பிற கட்டமைப்புகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தோம். வேலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் மக்களுக்கும் சமூகங்களுக்கும் இடையே வேறுபாடுகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டன.

    ஜெர்மனி சக்தி வாய்ந்ததாக மாறியபோது ஹிட்லர் பிறந்தார். அமெரிக்கா வல்லமை பெற்றபோது, ​​ஹிரோஷிமா மற்றும் நாகசாகி (அணுகுண்டு தாக்குதல்) நடந்தது. இப்போது சீனா சக்தி வாய்ந்ததாக இருக்கும்போது, ​​​​உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

    ஆனால் இந்தியா சக்தி வாய்ந்ததாக இருக்கும்போது ​​​​அது உலகைக் காப்பாற்ற அதன் சக்திகளைப் பயன்படுத்துகிறது. இந்தியா முழு உலகிற்கும் ஒற்றுமை மற்றும் அகிம்சை மந்திரத்தை வழங்குகிறது. நாம் அனைவரும் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை உண்மையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

    இந்திய நாகரிகம் 2,400 ஆண்டுகள் பழமையானது. இந்தியா வளரச்சியடைந்த நாடாக மாற, இளைஞர்கள் தியாகங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியா வல்லரசாக நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழியே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் அனைத்து சாதியினரும் இந்தியர்களே என்பதை நாம் உணர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×