என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RRvPBKS"

    • முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    ஜெய்ப்பூர்:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.

    அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேசியதாவது:

    முந்தைய நாள் பயிற்சியின் போது கைவிரலில் பந்து தாக்கியதால் வலி இருந்தது. காயத்தின் தன்மை குறித்து தெளிவாக தெரியவில்லை. அதனை பரிசோதனை செய்யவேண்டும்.

    பீல்டிங் செய்ய களம் இறங்காததால் வெளியில் இருந்தபடி வீரர்களுக்கு தகவல்களை பரிமாறினேன். எதிரணி சிறப்பாக ஆடும் போது நமது வீரர்களுக்கு தளர்வு ஏற்படும். அதனை தவிர்க்கவே வீரர்களுடன் தொடர்ந்து பேசினேன். எங்கள் அணி வீரர்களின் துணிச்சலான அணுகுமுறை பாராட்டும் வகையில் இருந்தது.

    ஹர்பிரீத் பிரார் வலைபயிற்சியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் அருமையாக செயல்பட்டார். அவரது மனநிலை அபாரமாக இருக்கிறது.

    சூழ்நிலை எப்படி இருந்தாலும் வெற்றி பெறவேண்டும் என்ற மனநிலையை நாங்கள் ஒருங்கிணைந்து வெளிக்காட்டி இருக்கிறோம். இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சை அடித்து ஆடுவது கடினமாக இருந்தது. எனவே பெரும்பாலான ரன்களை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக எடுத்தோம். எந்தச் சூழ்நிலையிலும் ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக மாற்ற முடியும் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் 20 ஓவரில் 187 ரன்களை எடுத்தது.

    தரம்சாலா:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் தரம்சாலாவில் இன்று நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ல் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னும், அதர்வா தாயீட்19 ரன்னிலும், ஷிகர் தவான் 17 ரன்னிலும், லிவிங்ஸ்டோன் 9 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் பஞ்சாப் அணி 50 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து திணறியது.

    5வது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா ஜோடி 64 ரன்கள் சேர்த்த நிலையில், ஜிதேஷ் சர்மா 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சாம் கர்ரன் 49 ரன்னும், ஷாருக் கான் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.

    ×