search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reprimand"

    • திருப்பூரில் மாத்ரு சக்தி சங்கமம் என்ற மகளிா் மாநாடு விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.
    • உலகம் உருவான சமயத்தில் நமக்கு தாய்வழி சமூகம்தான் இருந்தது.

    திருப்பூர்:

    தனியார் அறக்கட்டளை சாா்பில் ஜான் சிராணி லட்சுமிபாய் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் மாத்ரு சக்தி சங்கமம் என்ற மகளிா் மாநாடு விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி கவிஞா் இரா.உமாபாரதி பேசியதாவது:-

    குழந்தைகள் தவறு செய்தால் கண்டிக்க வேண்டுமே தவிர தண்டிக்கக்கூடாது. தவறு செய்யக்கூடாது என்றும், செய்தத் தவறை மறைக்கக்கூடாது என்றும் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லவேண்டும். பயம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் சிறு தவறு, சிறு பொய்கூட சொல்லக்கூடாது. நாம் செய்யும் தவறு நமது மனசாட்சியை உறுத்திக்கொண்டே இருக்கும்.

    நாம் ஒவ்வொருவரும் நமக்கு நாமே உண்மையாக இருக்க வேண்டும். பெண் என்பவள் பேராற்றல் மிகுந்தவள். உலகில் இருக்கும் எல்லாவற்றுக்கும் முதன்மையானவள். உலகம் உருவான சமயத்தில் நமக்கு தாய்வழி சமூகம்தான் இருந்தது. இந்த உலகில் உண்மையை, நோ்மையை நிலைநாட்டுபவள் பெண். எத்தனை துன்பம் வந்தாலும் அதை தன்னுள் மறைத்துவைத்து விட்டு மகிழ்ச்சியை மட்டுமே வெளிக்காட்டுபவள் பெண் என்றாா்.

    • குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டு ஒழுங்காக வேலைக்கு செல் என கூறி பெற்றோர் கண்டித்துள்ளனர்.
    • மனம் உடைந்த ராமு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானம்புசாவடி விஜயமண்டப தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 23 ).

    சமையல் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டு ஒழுங்காக வேலைக்கு செல் என கூறி பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதில் மனம் உடைந்த ராமு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சைக் கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×