search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reduced in price"

    • நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சத்துணவு திட்டத்திற்கு தவிர மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த 1-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.10 ஆக இருந்தது. 3-ந் தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ.4.20 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.15 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.105 ஆக இருந்த கறிக்கோழி விலை ரூ.90 ஆக குறைந்தது. முட்டைக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ.78 ஆக நீடிக்கிறது.

    ×