search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranjan kokai"

    பணம், அதிகாரம் படைத்தவர்களால் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்று தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. #SC #Ranjankokai
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனைவருக்கும் அவர் பிரமாணப் பத்திரம் அனுப்பி இருந்தார்.

    தன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை அடைந்தார். இதை அவர் முற்றிலும் மறுத்தார்.

    தலைமை நீதிபதி மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 3 நீதிபதிகள் குழு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட குழு நாளை இது பற்றி விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே பாலியல் வழக்கில் தலைமை நீதிபதியை சிக்கவைக்க சதி நடப்பதாக வக்கீல் உத்சவ் ஸ்பெய்னிஸ் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதற்கான ஆதாரங்களையும் அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.


    இந்த வழக்கில் தலைமை நீதிபதிக்கு எதிராக வாதிட ரூ.1½ கோடி வரை தருவதாக சிலர் முயன்றுள்ளனர் என்று பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக அருண்மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அமர்வு முன் நேற்று விசாரணை நடந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், தீபக் குப்தா ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர்.

    இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

    தலைமை நீதிபதிக்கு எதிரான பொய் குற்றச்சாட்டு நெருப்புடன் விளையாடுவது போன்றது. பணம், அதிகாரம் படைத்தவர்களால் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.

    நீதித்துறை மீது கடந்த 3, 4 ஆண்டுகளாக இது போன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. நீதித்துறை மீதான தாக்குதல் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டது.

    நீதித்துறை மீதான தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை யார் என்று அடையாளம் காணுவது அவசியமாகும். இது தொடர்பாக புலனாய்வு குழு விசாரிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறினார்கள்.

    இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வு குழு அமைப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு, இன்று பிற்பகலில் உத்தரவு பிறப்பிக்கிறது. #SC #Ranjankokai
    ×