search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rainwater damage"

    • மழைகாலங்களில் மழைநீரை வடிய வைக்க முடியவில்லை.
    • சுமார் 40 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    மெலட்டூர்:

    அன்னப்பன்பேட்டை சேர்ந்த விவசாயிகள் தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு, அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;-

    பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை கிராமத்தில் பல விவசாய நிலங்களின் முக்கிய வடிகால் வாய்க்காலை தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதனால் மழைகாலங்களில் மழைநீரை வடிய வைக்க முடியவில்லை. சுமார் 40 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து உடனடியாக வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரியகுளத்தில் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் பொருட்டு சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
    • சுவர் பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும் என்றும் பொதுப்பணி த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சி வாரி வாய்க்கால் மற்றும் புதுப் பாலம், ஆடு பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் பொருட்டு சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வராக நதி செல்லும் புதுப்பாலம் அருகே புதிதாக தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் எனவும் வாரி வாய்க்கால் பக்கவாட்டு சுவர் பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும் என்றும் பொதுப்பணி த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

    நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், மஞ்சளாறு வடிநில கோட்ட நீர்வள த்துறை (பொதுப்பணி த்துறை) உதவி செயற்பொறி யாளர் சவுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் முகமது இலியாஸ் மற்றும் நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    ×