search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahul Dravi"

    • தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பங்கேற்க இயலாது என பிசிசிஐ-யிடம் தெரிவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன்னதாக ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் இஷான் கிஷன். இவருக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்காவிடிலும், கிடைத்த வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறார்.

    50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இவர்தான் விக்கெட் கீப்பர் என கருதப்பட்டது. கே.எல். ராகுல் உடற்தகுதி பெற்றதால் ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நேரத்தில் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் மீது பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன்பிறகு ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை.

     இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இதுகுறித்து கூறியதாவது:-

    இஷான் கிஷன் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது முற்றிலும் இல்லை. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அவரால் பங்கேற்க இயலாது என்று கோரிக்கை விடுத்தார். நாங்கள் அதை ஏற்றுக் கொண்டு ஆதரவாக இருந்து அங்கீகரித்தோம். அவர் இன்னும் தேர்வுக்கு வரவில்லை. உள்நாட்டு போட்டிகளில் விளையாடி அவராகவே தேர்வுக்கு தயாராகுவார்.

    இவ்வாறு டிராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இதனால் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடம் என்பது ராகுல் டிராவிட் கூற்றுப்படி உறுதியாகியுள்ளது.

    கடந்த ஏழு வாரங்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாடாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பெறவில்லை.

    தற்போது ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தை தொடர்பு கொண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறாரா? என்பது குறித்து அம்மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் டெபசிஷ் சக்ரபோர்ததியிடம் கேட்கப்பட்டது. இஷான் கிஷன் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றுதான் பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து டெபகிஷ் சக்ரபோர்த்தி கூறுகையில் "இஷான் கிஷன் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. அல்லது போட்டியில் இடம்பெறுவது குறித்து எங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை. அவர் எப்போது எங்களிடம் பேசினாலும், நேராக வந்து ஆடும் லெவன் அணியில் களம் இறங்கலாம்." என்றார்.

    இதனால் இஷான் கிஷன் விவகாரம் இன்னும் மர்மமான முறையில்தான் நீடிக்கிறது. என்ன இருந்தாலும் உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்திய அணியில் அணியில் அவருக்கு இடம் என்பது நிச்சயம்.

    ×