என் மலர்
நீங்கள் தேடியது "pyramid"
- இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன.
- 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது
எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் எழுத்துக்கள் பொறி பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுப்பு. இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன.
'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் 'சிகை கொற்றன் - வர கண்ட' (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது.
ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகும்.
இதையொட்டி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது.
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது.
ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி. "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்பதோடு "உலகம் தழுவிய தமிழ்" என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
- பிரமிடுகளில் ஸ்டெப் பிரமிடுகள் step pyramids இன்னும் அரிதானவை
- கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் உள்ள அபய் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பிரமிடுகள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான பிரமிடுகள், கட்டிடக்கலை வடிவங்களில் ஆச்சர்யமான ஒன்றாக கருதப்படுகிறது.
இவற்றின் அழகை ரசிக்க உலகெங்குமிலிருந்து எகிப்துக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமிடுகளில் "ஸ்டெப் பிரமிடுகள்" (step pyramids) இன்னும் அரிதானவை. இவ்வகை பிரமிடுகள் படிப்படியாக ஒவ்வொரு தரைதளங்களின் மேல் ஒவ்வொன்றாக கட்டப்பட்டு இருக்கும்.
மத்திய ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவி இருக்கும் நாடான கசக்ஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் (Astana) உள்ள அபய் (Abai) மாவட்டத்தில், ஸ்டெப் பிரமிடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 4000 வருடங்களுக்கு முந்தையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குமில்யாவ் யுரேசிய தேசிய பல்கலைக்கழகத்தை (Gumilyov Eurasian National University) சேர்ந்த தொல்பொருள் துறையினர், அபய் மாவட்டத்தில் உள்ள கிரிகுங்கிர் (Kyrykungir) குடியேற்ற பிராந்தியங்களில், 2014 முதல் நடத்தி வரும் அகழ்வாராய்ச்சியில் இதனை கண்டுபிடித்தனர்.
"அறுகோண அடித்தளத்தில் 13 மீட்டர் நீளம் உள்ள இவை 8 வரிசை கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் மத்தியில் ஒரே மையத்தை கொண்ட பல வட்டவடிவங்களில் கட்டுமானங்கள் உள்ளன. வெளிப்புற சுவர்களில் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் பிம்பங்கள் உள்ளன. மிகவும் நுட்பமான கட்டமைப்பு கொண்ட இது, மனித நாகரிகத்தில் கற்காலத்திற்கும் இரும்பு காலத்திற்கும் இடைப்பட்ட வெண்கல காலத்தை (bronze age) சேர்ந்த மக்களின் அற்புதமான தொழில்நுட்ப அறிவுக்கு சான்று" என யுரேசிய பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை தலைமை பேராசிரியர் உலன் உமிட்கலியேவ் (Ulan Umitkaliyev) தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களும், பட்டதாரிகளும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள அகழ்வாராய்ச்சியில் சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






