என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Eurasian National University"
- பிரமிடுகளில் ஸ்டெப் பிரமிடுகள் step pyramids இன்னும் அரிதானவை
- கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் உள்ள அபய் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பிரமிடுகள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான பிரமிடுகள், கட்டிடக்கலை வடிவங்களில் ஆச்சர்யமான ஒன்றாக கருதப்படுகிறது.
இவற்றின் அழகை ரசிக்க உலகெங்குமிலிருந்து எகிப்துக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமிடுகளில் "ஸ்டெப் பிரமிடுகள்" (step pyramids) இன்னும் அரிதானவை. இவ்வகை பிரமிடுகள் படிப்படியாக ஒவ்வொரு தரைதளங்களின் மேல் ஒவ்வொன்றாக கட்டப்பட்டு இருக்கும்.
மத்திய ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவி இருக்கும் நாடான கசக்ஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் (Astana) உள்ள அபய் (Abai) மாவட்டத்தில், ஸ்டெப் பிரமிடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 4000 வருடங்களுக்கு முந்தையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குமில்யாவ் யுரேசிய தேசிய பல்கலைக்கழகத்தை (Gumilyov Eurasian National University) சேர்ந்த தொல்பொருள் துறையினர், அபய் மாவட்டத்தில் உள்ள கிரிகுங்கிர் (Kyrykungir) குடியேற்ற பிராந்தியங்களில், 2014 முதல் நடத்தி வரும் அகழ்வாராய்ச்சியில் இதனை கண்டுபிடித்தனர்.
"அறுகோண அடித்தளத்தில் 13 மீட்டர் நீளம் உள்ள இவை 8 வரிசை கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் மத்தியில் ஒரே மையத்தை கொண்ட பல வட்டவடிவங்களில் கட்டுமானங்கள் உள்ளன. வெளிப்புற சுவர்களில் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் பிம்பங்கள் உள்ளன. மிகவும் நுட்பமான கட்டமைப்பு கொண்ட இது, மனித நாகரிகத்தில் கற்காலத்திற்கும் இரும்பு காலத்திற்கும் இடைப்பட்ட வெண்கல காலத்தை (bronze age) சேர்ந்த மக்களின் அற்புதமான தொழில்நுட்ப அறிவுக்கு சான்று" என யுரேசிய பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை தலைமை பேராசிரியர் உலன் உமிட்கலியேவ் (Ulan Umitkaliyev) தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களும், பட்டதாரிகளும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள அகழ்வாராய்ச்சியில் சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்