என் மலர்

  நீங்கள் தேடியது "puthiya thamizhagam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் தலா ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். #ADMK #VaigaiChelvan
  சென்னை:

  பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாகி உள்ளது.

  தமிழகம்-புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

  அடுத்து தே.மு.தி.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

  இதற்கிடையே ஜி.கே.வாசனின் த.மா.கா., கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி ஆகியவை அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்தி வருகிறது.

  இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

  அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணியில் த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம்பெறுகின்றன. இது தொடர்பாக அந்த கட்சி தலைவர்கள் எங்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்கள். ஓரிரு நாளில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

  அப்போது அவரிடம் இந்த கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடும் என்று கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், “கடந்த தேர்தலில் சிறிய கட்சிகளுக்கு அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.  அது போல் இந்த தேர்தலில் இந்த கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளது” என்றார்.

  இந்த 3 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது என்றும் வைகைச் செல்வன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

  அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து செய்திகள் வருகின்றன. நடந்து முடிந்த காலங்களில் சூழ்நிலைக்கேற்ப கருத்துக்கள் கூறுவது வழக்கம். அது காலப்போக்கில் மறைந்து விடும். கூட்டணி என்று வந்த பிறகு பழையவற்றை தோண்டி பார்க்க கூடாது.

  தற்போதைய நிலைப்பாட்டைதான் பார்க்க வேண்டும். தி.மு.க., காங்கிரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் லட்சியம். அதனால்தான் ஒன்று சேருகிறோம். ஜெயலலிதா இருக்கும் போது 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

  இந்த தேர்தலில் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுவோம். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அடையாளம் தெரியாமல் போய்விடும்.

  டி.டி.வி. தினகரன் அணியில் உள்ளவர்கள் தேர்தலுக்குள் தாய் கழகத்தில் சேருவார்கள் என்று நம்புகிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார். #ADMK #VaigaiChelvan #TamilMaanilaCongress

  ×