search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puplic"

    • 49-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
    • பொதுமக்கள் கூறிய குறைகளை பணிவுடன் கேட்டுக்கொண்ட மேயர் தினேஷ் குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வார்டுகள் வாரியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அதன்படி இன்று காலை 49-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் கூறிய குறைகளை பணிவுடன் கேட்டுக்கொண்ட மேயர் தினேஷ் குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இதேபோல் வார்டு முழுவதும் வீதி வீதியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்கான தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார்.

    • மின்வெட்டால் பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    • தெருவிளக்கு மற்றும் குடிதண்ணீர் வசதி செய்து கொடுப்பதில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

    கடையம்:

    கடையம் ஒன்றியம் மந்தியூர் பஞ்சாயத்து பிள்ளையார்குளம், மந்தியூர், மீனாட்சிபுரம், ராமலிங்கபுரம், வாகைகுளம் மற்றும் பல்வேறு கிராமங்களை உள்ளடக்கியது.

    மந்தியூர் பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம் மின்வாரிய அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், மந்தியூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில்அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பள்ளி செல்லும் குழந்தைகள் உட்பட கிராம பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    மேலும் தெருவிளக்கு மற்றும் குடிதண்ணீர் வசதி செய்து கொடுப்பதில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மின்சாரம் கொண்டு செல்லும் மின் கடத்திகள் பல இடங்களில் குறைவான உயரத்தில் கீழே தொங்கியபடி செல்கிறது. எனவே மின் கடத்திகளை சரி செய்ய வேண்டும்.

    மேலும் இந்தப் பகுதியில் விவசாயிககளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியும்.

    எனவே உடனடியாக மின் வாரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சரியான மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

    இப்பகுதியில் ஏற்படும் மின்சார குறைபாடுகளை சரிசெய்ய நிரந்தரப் பணியாளர் ஒருவரை இங்கு நியமிக்க வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×