search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protection program"

    • கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதலீட்டு பத்திரம் பெற்றுள்ள பயனா ளிகளில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் முதலீட்டு பத்திரம்,

    10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றி தழ் நகல், பயனாளிகளின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், பயனாளி மற்றும் அவரின் தாயின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் 1 ரூபாய் வருவாய் அஞ்சல் வில்லை ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக களப்பணியா ளர்களை அணுகுமாறு தெரிவிக்க ப்படுகிறது.

    மேலும் பிரதிமாதம் 2-வது செவ்வாய்க் கிழமை "பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனா ளிகள் தினமாக" அனுசரித்து இத்திட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    எனவே 18 வயது பூர்த்தி அடைந்த பயனாளிகள் மேற்கு றிப்பி ட்ட விவரங்க ளுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறு மாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து ள்ளார்.

    ×