என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prose"

    • சிவராமன், இவரது மனைவி ஆஷா என்கிற அபிராமி (27), இவர்களுக்கு யுகஸ்ரீ (7) என்கிற மகள் உள்ளார்.
    • உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று வருவதாக கூறி மகளுடன் சென்ற அபிராமி வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன், இவரது மனைவி ஆஷா என்கிற அபிராமி (27), இவர்களுக்கு யுகஸ்ரீ (7) என்கிற மகள் உள்ளார்.

    இவர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி டைலரிங் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 4-ந்தேதி சொந்த ஊரான பைத்தாம்பாடிக்கு வந்தனர். உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று வருவதாக கூறி மகளுடன் சென்ற அபிராமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் சிவராமன் புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மகளுடன் காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்

    ×