search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Projects work"

    • பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் சீர்மிகுநகர் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.
    • சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் நடந்து வரும் வ.உ.சி. மைதானம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா இன்று நெல்லையில் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்்.

    பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் சீர்மிகுநகர் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை பார்வையிட்டார்.

    அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள உள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அண்ணா விளையாட்டு அரங்கம் சென்ற அவர் அங்குள்ள ஆக்கி மைதானம், தடகள போட்டி மைதானம், மற்றும் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை வர உள்ள நிலையில் கடந்தாண்டு ஏற்பட்ட மழையின் போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    எனவே இந்த ஆண்டு மழையின் போது ஏற்படும் வெள்ளம் மற்றும் மழைநீர் உடனடியாக வடிந்து விடும்.

    சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் நடந்து வரும் வ.உ.சி. மைதானம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது.

    வ.உ.சி. மைதானத்தை பொருத்தவரை ஒரு தனி விளையாட்டுக்கு மட்டும் ஒதுக்காமல் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் அளவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்த மைதானத்தில் நடத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    சந்திப்பு பேருந்து நிலையத்தை பொறுத்தவரை கனிமவளம் தொடர்பாக வழக்கு இருப்பதால் அது முடிந்த பின்பு விரைவாக பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் சேரன்மகாதேவி தாலுகா அலுவலத்தில் ஆய்வு செய்த அவர் அங்குள்ள இ-சேவை மையத்தை பார்வையிட்டார். 

    ×