என் மலர்
நீங்கள் தேடியது "Prof.Anbazhagan"
- தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
- தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கி பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் வழக்கறிஞர் க.கனிமொழி, கென்னடி, மாவட்ட பொருளாளர் ஷெரீப், தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ ஆறுமுகச்சாமி, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சீவநல்லூர் சாமிதுரை ராஜேஸ்வரன், தமிழ்ச்செல்வி, தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் ஷேக்அப்துல்லா, ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தென்காசி கிழக்கு அழகுசுந்தரம், தென்காசி மேற்கு வல்லம் திவான் ஒலி, சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் குற்றாலம் பேச்சிமுத்து, பண்மொழி ஜபருல்லாகான், தென்காசி கோமதிநாயகம், கொட்டாகுளம் இசக்கி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






