search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Procurement Station"

    • இடைக்காட்டூர் ஊராட்சியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு கடந்தாண்டு நெல் அறுவடையின்போது கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடை களை விவசாயிகள் கொள்முதல் செய்தனர்.

    இந்தாண்டு மீண்டும் கொள்முதல் நிலையம் திறக்காததால் இடைக்காட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான சிறுகுடி, பெரிய கோட்டை, பதினெட்டாம்கோட்டை, அருளானந்தபுரம், செட்டி குளம், தெக்கூர், காளிபட்டி உள்பட ஏராளமான கிராமங்களில் இருந்து பல ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

    ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தாண்டு நெல் அறுவடை பணி முடிந்த நிலையில் தற்போது நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் விவசாயிகள் விளைவித்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல்மூடைகளை திறந்த வெளியில் ஆங்கா ங்கே விவசாயிகள் இறக்கி அடுக்கி வைத்தனர். மேலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் இந்த நெல் மூடைகள் மழையில் நனையும் அவல நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இனி வரும் நெல்லை பாதுகாக்க உடனடியாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் விவசாயிகள் இதுகுறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி, அமைச்சர் பெரியகருப்பனிடம் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் உடனடியாக இடைகாட்டூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து உடனடியாக நேற்று இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் தலைமையில் நெல்கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நெல் அறுவடை நடக்கிறது.
    • இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், அயன் சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதியில் நெல்அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது.

    சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆனால் இந்த ஆண்டு இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைகின்றனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.

    இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வயல் வெளியில் கொட்டி வைத்துள்ளனர்.

    ×