search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price gouging"

    • தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது.
    • சமீப காலங்களில் தக்காளி விலையேற்றத்தை அறிந்திருப்பீர்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரும் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த சில ஆண்டுகளாக சரியான அளவீட்டில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கரும்பு, நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் ஒரே பயிரை மட்டும் பயிரிடாமல் பல்வேறு வகையான மாற்றுப் பயிர்களை மாற்றி பயிரிட்டால் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும். தற்போது உள்ள வாழ்வியல் சூழ்நிலையில், மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்காக சிறுதானியங்களை, அதிக அளவில் பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும்.

    சமீப காலங்களில் தக்காளி விலையேற்றத்தை அறிந்திருப்பீர்கள், எனவே காய்கறிகளும் பெருமளவில் பயிரிட வேண்டும். இதற்கான ஆலோசனைகளும், சந்தேகங்களையும் வேளாண் விஞ்ஞானிகளிடம் தெரிந்து கொண்டு செயல்படவேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக வேளாண் தொழில் நுட்பங்கள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டார். மேலும் வேளாண் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, துணை இயக்குநர் தோட்ட கலை துறை சசிகலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், வாழ வச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கவின்னோ, யசோதா, கார்த்திகேயன், வேளாண்மை துணை இயக்குநர் வேளாண் வணிகம் (பொ) சத்திமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குநர் முரளி, விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கர்நாடகத்திலும், ஓசூர் பகுதியிலும் போதுமான அளவுக்கு மழை பெய்யாததால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது.
    • பெண்களின் பூ மீதான ஆசையை நிறைவேற்ற பிளாஸ்டிக்கில் ஒரிஜினல் பூ போலவே தயாார் செய்து விற்பனைக்கு வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேலூர், திருவள்ளூர், பெரிய பாளையம், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

    கர்நாடகத்திலும், ஓசூர் பகுதியிலும் போதுமான அளவுக்கு மழை பெய்யாததால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்தும் பெருமளவு குறைந்துவிட்டது.

    வரத்து குறைவால் கடந்த ஒரு மாதமாகவே பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஆடி மாதம் பிறந்துள்ளதால் ஆடி வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறும். இதனால் கோவில் வழிபாட்டுக்கும் பெண்கள் தலையில் சூடவும் பூக்கள் வாங்குவார்கள்.

    ஆனால் தேவையான அளவுக்கு பூக்கள் வராததால் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. சாமந்தி பூ கிலோ ரூ.220, ரோஜா ரூ.100 முதல் ரூ.120, மல்லிகை கிலோ ரூ.800, சேர் ரூ.250 வரை அதிகரித்துள்ளது.

    பெண்கள் தலையில் சூட விரும்பும் மல்லி விலை உயர்வால் ஒரு முழம் ரூ. 50-க்கு விற்கப்பட்டது.

    சாதாரணமாக இருபது, முப்பது ரூபாய்க்கு மல்லிகை பூ வாங்கி தலையில் வைக்கும் பெண்கள் விலை உயர்வை பார்த்து பூ வாங்க முடியாமல் தவித்தனர்.

    இதற்கிடையில் பெண்களின் பூ மீதான ஆசையை நிறைவேற்ற பிளாஸ்டிக்கில் ஒரிஜினல் பூ போலவே தயாார் செய்து விற்பனைக்கு வந்துள்ளது. அந்த பூக்களையும் வாங்கி சூடுகிறார்கள்.

    மல்லிகை பூக்களை தலை நிறைய சூடி மகிழ்ந்தும், அதன் வாசனையை ரசித்தும் மகிழ்ந்த பெண்கள் பிளாஸ்டிக் பூக்களை சூடி பூ வைக்கும் ஆசையை நிறைவேற்றி கொள்வது பரிதாபமானது.

    சாமந்தி பூக்கள் ஐதராபாத்தில் கிலோ ரூ.350-க்கு மேல் விற்பனையாவதால் விவசாயிகள் பெருமளவு பூக்களை அங்கு அனுப்புகிறார்கள். மேலும் எல்லா பூக்களின் வரத்தும் குறைவாக இருப்பதால் இன்னும் பூக்கள் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு மொத்த வியாபாரி எஸ்.பி.எல்.பாண்டியன் கூறினார்.

    • வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
    • ஏலக்கி வாழைப்பழம் மிக குறைந்த அளவில் வரத்து உள்ளன.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ராமாபுரம், வழி சோதனை பாளையம், வெள்ளக்கரை, சாத்தான்குப்பம், கீரப் பாளையம், ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், சேடப்பாளை யம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று சூறாவளி காற்று நள்ளிரவில் அடித்த காரணத்தினால் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. மேலும் லட்சக்கணக் கான ரூபாய்கள் பயிரிடப் பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் திடீரென்று வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பி லான வாழைத்தார்கள் சேதமாகி நாசமாயின.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு டன் கணக்கில் வாழைப் பழங்கள் மேற்கண்ட பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற் பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத்தொடர்ந்து கடலூர் சுற்றியுள்ள பகுதி களில் வாழைத்தார்களை அறுவடை செய்யப்பட்டு ஜூன் மாதம் முதல் ஜன வரி மாதம் வரை வாழைத் தார்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அறு வடைக்கு முன்பு வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் தற்போது வாழைத்தார்கள் இல்லா மல் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.

    இதன் காரணமாக கடலூர் உழவர் சந்தையில் செவ்வாழை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 1100 ரூபாய்க்கும், கற்பூரவல்லி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்தநிலையில் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பூவன்பழம் ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழைத்தார் குறைந்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது மேலும் ஏலக்கி வாழைப்பழம் மிக குறைந்த அளவில் வரத்து உள்ளன. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வாழைத்தார்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் விலை அனைத்தும் 2 மடங்காக உயர்ந்து உள்ளதால் பொது மக்கள் வாழைப் பழம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். மேலும் இனி வருங்காலங்களில் அதிக அளவில் கோவில் திரு விழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்நோக்கி உள்ள நிலை யில் போதுமான அளவில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தால் வரலாறு காணாத வகையில் வாழைத் தார்கள் மற்றும் வாழை பழங்கள் அதிக விலையில் விற்பனையாகும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×