search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "press interview"

    சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #ParlimentElection #SurjicalStrikes #Demonetizaiton #UrjitPatel #RamarTemple
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சாமானியர் மற்றும் மெகா கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும். நான் சாமானியரின் பிரதிபலிப்பு தான்.

    பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக்) துணிச்சலான நடவடிக்கை. இந்த துல்லிய தாக்குதல் நடத்திய வீரர்கள் குறித்து கவலை கொண்டிருந்தேன். அவர்களில்
    எந்த ஒரு வீரரும் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.



    ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்தியது. சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

    ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை. உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநராக சிறப்பாக பணியாற்றினார். அவர் சொந்த காரணங்களுக்காகவே பதவி விலகினார்.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஒரு சிலர் மட்டுமே கருப்பு பணத்தை தாமாக முன்வந்து திரும்ப செலுத்தினர். நாட்டை நான்கு தலைமுறைகளாக ஆட்சி செய்து வந்தவர்கள் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். #PMModi #ParlimentElection #SurjicalStrikes #Demonetizaiton #UrjitPatel #RamarTemple
    ×