search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Potato Palak Cutlet"

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, பாலக்கீரை சேர்த்து கட்லெட் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பசலைக்கீரை - ஒரு சிறு கட்டு,
    உருளைக்கிழங்கு - 2,
    பிரெட் ஸ்லைஸ்கள் - 4,
    பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பிரெட் தூள் - சிறிதளவு,
    மைதா மாவு - அரை கப்,
    சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான ஆலு பாலக் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×