search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ponngal Gift"

    • 2024 ஆண்டிற்கான பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்க உத்தரவு.

    பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தமிழ்நாடு அரசின் அராசாணையில், "2024 தைப்பொங்கலை ஒட்டி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    இதற்காக ரூ. 238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ. 1000 வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை.

    ×