என் மலர்

  நீங்கள் தேடியது "polices injured"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு போலீசார் படுகாயம் அடைந்தனர். #BombBlast #PoliceInjured
  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ளது மம்சாபுரம் காவல் நிலையம். நேற்று முன்தினம் ரோந்து சென்ற போலீசார் 7 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அவற்றை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

  இந்நிலையில், மம்சாபுரம் காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் பணி இன்று நடைபெற்றது.

  அப்போது அதில் இரு நாட்டு வெடிகுண்டுகள் திடீரென வெடித்தன. இதில் காவல் நிலையத்தில் இருந்த 2 போலீசாருக்கு படுகாயம் ஏற்பட்டது.

  காவலர்கள் தேவதாஸ் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்க்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  காவல் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து போலீசார் காயமடைந்தது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BombBlast #PoliceInjured
  ×