search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police man wife missing"

    கன்னியாகுமரி அருகே போலீஸ்காரர் மனைவி மாயமானது குறித்து அவரது மாமியார் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தேவிமஞ்சு (வயது 29). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள 9-வது பட்டாலியனில் சுரேஷ் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் சத்தீஷ்கர் மாநில தேர்தல் பணிக்காக சென்று உள்ளார். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி சுரேஷ் போன்மூலம் தனது மனைவியை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லை. இதனால் தனது தாயார் வசந்தாவை போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறினார். அவர் அங்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. தேவி மஞ்சு மாயமாகி இருந்தார்.

    இந்த தகவலை அவர் சுரேசுக்கு தெரிவித்தார். அதன் பிறகு கன்னியாகுமரி போலீசில் வசந்தா இது பற்றி புகார் செய்தார். அந்த புகாரில் மாயமான தனது மருமகள் தேவிமஞ்சுவை கண்டுபிடித்து தரும் படி கூறி இருந்தார். இது பற்றி இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குபதிவு செய்து மாயமான தேவிமஞ்சுவை தேடி வருகிறார்.

    திண்டுக்கல் அருகே குழந்தையை தவிக்க விட்டு மாயமான போலீஸ்காரர் மனைவியை தேடி வருகின்றனர்.

    கன்னிவாடி:

    திண்டுக்கல் அருகே கன்னிவாடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்ராஜா (வயது 24). கோவை 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி ஏஞ்சல் புளோரி (24) இவர்களுக்கு மேனிஷா (4) என்ற என்ற பெண் குழந்தை உள்ளது.

    கோவையில் வேலை பார்த்து வந்த வேல்ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது ஏஞ்சல் புளோரியின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதை அவர் மறைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வேல்ராஜா ஏஞ்சல் புளோரியின் செல்போனை சோதனை செய்துள்ளார். அதில் அவர் பல ஆண்களுடன் பேசியது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த வேல்ராஜா தனது மனைவியை கண்டித்துள்ளார்.

    கோபத்தில் வேல்ராஜா வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். வீடு திரும்பிய போது அங்கு ஏஞ்சல் புளோரி குழந்தையை தவிக்க விட்டு விட்டு மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கன்னிவாடி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×