search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police action order"

    • சிலைக்கு 5 போ் 24 மணி நேரமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
    • ஊா்வலம் அமைதியான முறையில் நடைபெற கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப் பட்டன.

    திருப்பூர்:

    விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக இந்து அமைப்பினருடன் ஆலோசனைக்கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.கூட்டத்துக்கு அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பவுல்ராஜ் தலைமை வகித்தாா். ஆய்வாளா்கள் ராஜவேல், வசந்தகுமாா், அம்பிகா, சக்திவேல், சக்திவேல், தினகரன், காவல் உதவி ஆய்வாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    விநாயகா் சதுா்த்தி விழாவில் கடந்த ஆண்டு பிரதிஷ்டை செய்த இடங்களை தவிர வேறு இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. அனுமதி பெற்று விளம்பர பதாகைகள், ஒலிபெருக்கி வைக்க வேண்டும். காலை, மாலை என 2 மணி நேரம் அனுமதித்த சப்தத்துடன் உபயோகிக்க வேண்டும். சிலைகளை பிரதிஷ்டை செய்யும்போதும், ஊா்வலம் செல்லும் போதும் வாணவேடிக்கை, பட்டாசுகள் உபயோகிக்கக்கூடாது.

    களிமண், காகிதக்கூழ் ஆகியவை கொண்டு தயாரித்த சிலைகளையே அமைக்க வேண்டும். சிலைக்கு 5 போ் 24 மணி நேரமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், சிலை வைக்கும் இடத்தின் உரிமையாளா், காவல் துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியத்தினரிடம் தடையின்மைச் சான்று பெறுதல், சாா்ஆட்சியரிடம் உரிய படிவத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறுதல், ஊா்வல ஒருங்கிணைப்பாளா்கள், ஊா்வலம் அமைதியான முறையில் நடைபெற கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டன.இந்த கூட்டத்தில், இந்து முன்னணியினா் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினா், காவல் துறையினா் பங்கேற்றனா்.

    ×