என் மலர்
நீங்கள் தேடியது "Petition mela"
- சேலம் லயன்மேடு போலீஸ் சமுதாய கூடத்தில் இன்று காலை சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) மதிவாணன் தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.
- இன்று தரப்படும் புகார் மனுக்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் உத்தரவிட்டார்.
சேலம்:
சேலம் லயன்மேடு போலீஸ் சமுதாய கூடத்தில் இன்று காலை சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) மதிவாணன் தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில் சேலம் டவுன், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி சரகங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மீது அதிருப்தியில் உள்ளவர்களை நேரில் வரவழைத்து, விசாரணை மேற்கொண்டு எதிர் தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்தி உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று தரப்படும் புகார் மனுக்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் உத்தரவிட்டார். இந்த பெட்டிஷன் மேளாவில் ஏராளமான மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.






