search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pallavaram constituency"

    பல்லாவரம் தொகுதியில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பல்லாவரம் தொகுதியில் தற்போது நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை குறித்து சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் இ.கருணாநிதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

    “அவர் பேசும் போது பல்லாவரத்தில் 10 நாட்களுக்கு 1 முறைதான் குடிநீர் வருகிறது. இங்கு நிரந்தரமாக குடிநீர் பிரச்சனையை போக்க வேண்டுமானால் பாலாற்றில் இருந்து கொண்டு வரப்படும் குழாயை மாற்றிவிட்டு அகலமான குழாய் அமைத்தால் நிரந்தர தீர்வுகிடைக்கும். இதற்கு ரூ.50 கோடி செலவாகும் என்று குடிநீர் வாரியம் தெரிவிக்கிறது” என்றார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் வேலுமணி பேசியதாவது-

    பல்லவபுரம் நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், நாளொன்றுக்கு நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் குடிநீரும், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம், நாள்தோறும் சராசரியாக 10 லட்சம் லிட்டர் குடிநீரும் மற்றும் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 36 இலட்சம் லிட்டர் குடிநீரும் ஆக மொத்தம் 86 இலட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    பல்லாவரம் நகராட்சி குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த, 99.95 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர்த் திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டு சென்னை குடிநீர் வாரியம் மூலம் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    அனகாபுத்தூர் நகராட்சியில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், மற்றும் உள்ளூர் நீராதாரங்கள் மூலம், நாளொன்றுக்கு 2.53 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 53 லிட்டர் குடிநீர் வீதம், 7 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

    குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த, 14.87 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நிதிகளைக் கொண்டு குடிநீர் திட்டம் எடுக்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    பம்மல் நகராட்சியில் தற்போது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், மற்றும் உள்ளூர் நீராதாரங்கள் மூலம், 3.19 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 42 லிட்டர் வீதம், 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    பம்மல் நகராட்சி குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த, ரூ.43.10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    தற்போது நடைபெற்று வரும் திட்டத்தில், 89 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் ஜனவரி2019ல் முடிக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதை, மாண்புமிகு உறுப்பினருக்கு பேரவைத் தலைவர் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly
    ×