என் மலர்

  நீங்கள் தேடியது "pakistan envoy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரான் நாட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 27 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. #IransummonsPakistan #Pakistanenvoyover #Iransuicide
  டெஹ்ரான்:

  இந்தியாவின் எல்லை மாநிலமான காஷ்மீரில் புல்வா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்-இ-முகமது என்ற பயங்கரவா அமைப்பினர் பொறுப்பெற்றனர்.
   
  இந்த நிலையில், ஈரானிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதி உள்ளது. அங்கு எல்லை பாதுகாப்புப் பணியில் ஈரான் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

  கடந்த புதன்கிழமை இப்பகுதிக்குள் புகுந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது அதிரடியாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 27 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

  இந்த அமைப்பும், இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதர் ரபட் மசவ்ட்-க்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

  எங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்து ஜெய்ஷ் அல்-அடில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பஹ்ரம் கசேமி வலியுறுத்தியுள்ளார். #IransummonsPakistan #Pakistanenvoyover #Iransuicide
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் தூதர் இன்று டெல்லியில் இருந்து தனது நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். #PulwamaAttack #PakistanEnvoy
  இஸ்லாமாபாத்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

  டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூதுவை அழைத்து இந்தியா எதிர்ப்பை பதிவு செய்தது. அனுகூலமான நாடு என பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை திரும்ப பெற்றது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிகாரியை டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.

  ஆனால், புல்வாமா தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி உள்ளது.

  இந்நிலையில் பாகிஸ்தான் அரசும் டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரை நாட்டிற்கு வரும்படி அழைத்தது. அதன்படி பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் டெல்லியில் இருந்து ஆலோசனை நடத்துவதற்காக தனது நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். #PulwamaAttack #PakistanEnvoy
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. #PulwamaAttack #PakistanEnvoy
  புதுடெல்லி:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. 

  இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. நாட்டின் பாதுகாப்பு, காஷ்மீரில் உள்ள நிலைமை மற்றும் அங்கு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, சர்வதேச சமூகத்தில் இருந்து பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும், அனுகூலமான நாடு என பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுவிட்டதாகவும், பாகிஸ்தானுக்கு இனி வர்த்தக ரீதியாக எந்த சலுகையும் வழங்கப்படமாட்டாது என்றும் ஜெட்லி கூறினார்.

  இந்நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹமூதுக்கு, வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே சம்மன் அனுப்பினார். இதையடுத்து, பாகிஸ்தான் தூதர், டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம், புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் கோகலே கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

  ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குழுக்கள் மற்றும் தனிநபர்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி பாதுகாப்பு படை வீரர்களை கொன்றதற்கு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். #PulwamaAttack #PakistanEnvoy
  ×