search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Our Lady of Perpetual"

  • எழில்மிகு தோற்றத்தில் இந்த கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.
  • குமரி மாவட்டத்தில் உள்ளது சிறப்பு மிக்க இந்த திருத்தலம்.

  குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க திருத்தலங்களில் சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலம் நாகர்கோவில்-கன்னியாகுமரி சாலையில் சுசீந்திரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வழுக்கம்பாறை சந்திப்பில் இருந்து அஞ்சுகிராமம் சாலையில் ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

  நீர்வளமும், நிலவளமும், இயற்கை எழிலும் நிறைந்த சகாயபுரத்தின் மையமாக இடைவிடா சகாய அன்னையின் பெருமையை பறைசாற்றும் வகையில் எழில்மிகு தோற்றத்தில் இந்த கத்தோலிக்க ஆலயம் அமைந்துள்ளது.

  சகாயபுரம் பகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஏழைகளாவும், விவசாய தினக்கூலிகளாகவும் உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த பலர் பாறையை பிளந்து கல் உடைத்து எடுப்பது, சிற்பங்கள் செதுக்க கீற்றுக்கல் எடுத்து கொடுப்பது, கல் தூண்கள் செதுக்கி கொடுப்பது, ஆட்டுக்கல், அம்மி கொத்தி கொடுப்பது, சிற்பங்களை செதுக்குவது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.

  பிரச்சினைகளில் இருந்து விடுதலை

  இங்குள்ள சகாய அன்னையின் திருஉருவ படம் உயிர்துடிப்பும், அருள் ஆற்றலும், கனிந்த பார்வையும், நெஞ்சத்தை ஈர்க்கும் தன்மையும் உடையது. இதை உற்று நோக்குவோர், உள்ளம் உருகி அன்னைக்கு அடிமையாகி ஆழ்ந்து போகிறார்கள். அவரது அருளை பல்வேறு வடிவங்களில் பெற்று செல்கிறார்கள்.

  குறிப்பாக இறைவன்மீது பற்றுதல், இயேசுவை பின்பற்றும் ஆர்வம், தீய பழக்கங்களில் இருந்து விடுதலை, திருமணம், மகப்பேறு வரம், பல்வேறு பிரச்சினைகளில் இருந்தும், நோய்களில் இருந்தும் விடுதலை போன்றவற்றை பெறுகிறார்கள்.

  மெய்மறந்து மன்றாடுகிறார்கள்

  ஆலயத்தின் உள்அமைப்பும், ஆலய வளாகத்தில் காக்கப்படும் அமைதி சூழலும் பக்தர்கள் கடவுளையும் அன்னையையும் நெருக்கமாக சந்திக்கவும், ஆறுதல் அடையவும் தூண்டுகிறது. இதனால் பலர் தனிமையாகவும், குடும்பத்தோடும் எல்லா நாட்களும் இந்த ஆலயத்திற்கு வந்து ஆலயத்தில் அமர்ந்து மெய்மறந்து மன்றாடி செல்கிறார்கள். இங்கு புதுமைகள் நடக்கின்றன என்றோ, பலர் அருங்காட்சிகள் காண்கிறார்கள் என்றோ பொறுப்பானவர்கள் பேசுவதோ, அறிவிப்பதோ இல்லை. சகாய அன்னை வழியாக இறைவனிடம் உருக்கமாக, நம்பிக்கையுடன் மன்றாடி வாழ்வின் பல்வேறு நலன்களை பெற்றவர்களே தங்களது அனுபவங்களை தங்கள் நண்பர்களுக்கு எடுத்துக்கூறுகிறார்கள்.

  இதனால் தொடக்க காலத்தில் இருந்தே பெருமளவில் மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து நவநாட்களில் பங்கு பெற்றுள்ளனர்.

  வாகனங்கள் அர்ச்சிப்பு

  இங்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகுவதையும், விண்ணப்பங்கள், நன்றியறிதல்கள் மிகுந்து வருவதையும் புதன்கிழமை நவநாளில் வருவோர் கண்டுகொள்கிறார்கள்.

  புதிதாக வாங்கப்பெற்ற மற்றும் தகுதிச்சான்றிதழ் பெற்ற பலவகைப்பட்ட வாகனங்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்துகூட அர்ச்சிக்கப்படுவதற்காக ஒவ்வொரு நாளும் இங்கு கொண்டு வரப்படுகின்றன. சகாய அன்னை ஊர்திகளுக்கும், அவற்றில் பயணம் செய்வோருக்கும், உழைப்போருக்கும் பாதுகாப்பு நல்குகிறார் என்ற நம்பிக்கை மக்கள் இடையே உள்ளது. இதுவும் இந்த திருத்தலத்தின் தனி சிறப்பாகும்.

  ஒப்புரவு ஆலயம்

  இந்த திருத்தலத்திற்கு வரும் மக்கள் உடலிலும், மனத்திலும், ஆன்மாவிலும் பாரங்களை சுமந்து வந்து திருத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு அமைதியான மனதோடு திரும்ப செல்கிறார்கள். இதற்கு உதவும் வகையில் அண்மையில் ஒப்புரவு ஆலயம் ஒன்று ஆலயத்தின் வெளியே முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒப்புரவு அருளடையாளத்தில் பங்கேற்க இருதனி அறைகள் உள்ளன.

  இங்கு நிதானமாக அமர்ந்து தகுந்த தயாரிப்புடனும் மனத்துயருடனும் வழக்கமான தனிப்பாவ மன்னிப்பு பெறவும், உரையாடல் வழி ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரச்சினைகளை உளவியல் அறிஞருடன் அமர்ந்து கலந்துரையாடி வழிகாட்டுதல், மனத்திடன் பெறும் ஆற்றுப்படுத்தலுக்கு வாய்ப்பு உள்ளது.

  தற்போது புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அருட்பணியாளர்கள், உளவியல் அறிஞர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். இந்த திருத்தலத்துக்கு வருவோர் மனிதரை மனிதர் அன்பு செய்ய தூண்டும், மனித நேயப்பண்புகளை வளர்த்தெடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த திருத்தலம் கோட்டார் மறைமாவட்டத்தின் அங்கமாக இருப்பதுடன், ஒரு தனி பங்காகவும் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் பங்குதந்தையாக அருட்பணியாளர் ஜோசப்ரொமால்ட் செயல்பட்டு வருகிறார்.

  • 20-ந் தேதி தேர் பவனி நடக்கிறது.
  • 21-ந்தேதி கூட்டு திருப்பலி, கொடி இறக்கம் நடக்கிறது.

  கோட்டார் மறைமாவட்டம் வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் 2-வது வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

  அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றமும், திருப்பலியும் நடைபெற்றது. கொடியேற்று விழாவுக்கு அருட்பணியாளர் டைனீசியஸ் தலைமை தாங்கினார். அருட்பணியாளர் ஆன்சன் மறையுரையாற்றினார்.

  உத்தரபிரதேச மாநிலம் பரேலி மறை மாவட்டத்தை சேர்ந்த ஆயர் இக்னேஷியஸ் டிசூசா திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆலய பங்குத்தந்தை ஜோசப் ரொமால்ட், இணை பங்கு தந்தை ஜெனிஷ் கவின், பங்கு பேரவை துணைத் தலைவர் தங்கப்பன், செயலாளர் கவிதா, துணைச்செயலாளர் கமலா ஜோதி, பொருளாளர் மேரி ஜெயபாக்கியம் மற்றும் பங்கு பேரவையினரும், பங்கு மக்களும் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

  9-ம் திருவிழாவான வருகிற 20-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலியும், 8 மணிக்கு கூட்டு திருப்பலியும், மாலை 6 மணிக்கு கொடி இறக்கமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை, பங்கு பேரவையினர், பங்கு மக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

  • திருவிழா நாளை தொடங்கி 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
  • நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது.

  கோட்டார் மறை மாவட்டம் வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் 2-வது வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

  இதையொட்டி நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடைபெறுகிறது. கொடியேற்று விழாவுக்கு அருட்பணியாளர் டைனீஷியஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஆன்சன் மறையுரையாற்றுகிறார். உத்திரபிரதேசம் மாநிலம் பரேலி மறை மாவட்டத்தை சேர்ந்த ஆயர் இக்னேஷியஸ் டிசூசா திருவிழா கொடியை ஏற்றிவைக்கிறார்.

  விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி ஆண்டுவிழா, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

  விழாவின் 9-ம் நாளான 20-ந்தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல் தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆராதனை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ரூபஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு அருட்பணியாளர் அலாய்சியஸ் தலைமை தாங்கி திருவிழா கூட்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் கிளாசின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு திருப்பலி, கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு சகாய அன்னை இளைஞர்கள் இயக்கம் நடத்தும் சிறப்பு கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

  விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ஜோசப்ரொபிரல்ட், இணை பங்குதந்தை ஜெனிஷ் கவின், பங்கு பேரவை துணைத்தலைவர் தங்கப்பன், செயலாளர் கவிதா, துணைச் செயலாளர் கமலா ஜோதி, பொருளாளர் மேரி ஜெயபாக்கியம் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

  • தொடர்ந்து நற்கருணைஆசி நடைபெற்றது.
  • இன்று திருவிழா நிறைவு திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.

  காரைக்குடி செக்காலையில் உள்ள தூய சகாயமாதா ஆலய திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றம் மற்றும் திருப்பலி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக நேற்று இரவு மின்விளக்கு சப்பர பவனி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் சந்தியாகு கலந்துகொண்டு அன்னையின் புகழ்பாடி மறையுரையாற்றினார்.

  பங்குத்தந்தை எட்வின்ராயன், உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ்ராஜா மற்றும் அருட் தந்தையர்கள் கலந்துகொண்டனர். தேர் பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி தாலுகா அலுவலக சாலை, நூறடி சாலை, பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை, கல்லூரி சாலை வழியாக வந்து மீண்டும் ஆலயத்தில் நிறைவு பெற்றது.

  சப்பர பவனியின் போது பாடகர் குழுவினர் அன்னையின் புகழ்பாடியும், நற்செய்தி குழுவினர் நற்செய்தி வாசித்து ஜெபமாலை கூறியும் வந்தனர். தொடர்ந்து நற்கருணைஆசி நடைபெற்றது. இன்று திருவிழா நிறைவு திருப்பலி நிகழ்ச்சி பங்குத்தந்தையர்களோடு, சிவகங்கை மறை மாவட்ட ஆலோசகர் சூசைமாணிக்கம் தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து சிறுவர், சிறுமியர்களுக்கு புதுநன்மை வழங்கப்பட்டு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்கு பேரவையினர், அனைத்து பணிக்குழுக்கள், இளையோர் இயக்கத்தினர், கார்மேல்சபை அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

  • ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை பவனி நடைபெறுகிறது.
  • 21-ந்தேதி நிறைவு திருப்பலி நடக்கிறது.

  காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சகாய அன்னையின் உருவக்கொடி ஆலய வளாகத்தில் பவனியாக கொண்டு வரப்பட்டது. கொடியினை தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி அதிபர் வின்சென்ட் அமல்ராஜ் புனித நீரால் அர்ச்சித்து கொடிமரத்தில் ஏற்றினார். தொடர்ந்து பங்கு தந்தையர்கள் எட்வின் ராயன், ஜேம்ஸ் ராஜா ஆகியோர் திருவிழா திருப்பலி நிறைவேற்றினார்கள். நவ நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

  நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை பவனி நடைபெறுகிறது. இதையடுத்து கலை நிகழ்ச்சிகள், சிறப்பு திருப்பலி, அன்னையின் உருவம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு பவனி வருகிறது.

  21-ந் தேதி நிறைவு திருப்பலி நடக்கிறது. திருப்பலி முடிவில் அன்னையின் கொடி இறக்கப்படுகிறது.

  ×