search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • 20-ந் தேதி தேர் பவனி நடக்கிறது.
    • 21-ந்தேதி கூட்டு திருப்பலி, கொடி இறக்கம் நடக்கிறது.

    கோட்டார் மறைமாவட்டம் வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் 2-வது வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றமும், திருப்பலியும் நடைபெற்றது. கொடியேற்று விழாவுக்கு அருட்பணியாளர் டைனீசியஸ் தலைமை தாங்கினார். அருட்பணியாளர் ஆன்சன் மறையுரையாற்றினார்.

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி மறை மாவட்டத்தை சேர்ந்த ஆயர் இக்னேஷியஸ் டிசூசா திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆலய பங்குத்தந்தை ஜோசப் ரொமால்ட், இணை பங்கு தந்தை ஜெனிஷ் கவின், பங்கு பேரவை துணைத் தலைவர் தங்கப்பன், செயலாளர் கவிதா, துணைச்செயலாளர் கமலா ஜோதி, பொருளாளர் மேரி ஜெயபாக்கியம் மற்றும் பங்கு பேரவையினரும், பங்கு மக்களும் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    9-ம் திருவிழாவான வருகிற 20-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலியும், 8 மணிக்கு கூட்டு திருப்பலியும், மாலை 6 மணிக்கு கொடி இறக்கமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை, பங்கு பேரவையினர், பங்கு மக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×